பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்ற பக்தர்கள்


பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்ற பக்தர்கள்
x
தினத்தந்தி 13 March 2021 1:56 AM IST (Updated: 13 March 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே மகா சிவராத்திரியையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே மகா சிவராத்திரியையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

மகா சிவராத்திரி

திருப்பத்தூர் புதுப்பட்டியில் அகஸ்தீஸ்வரர் ேகாவில் உள்ளது. இந்த கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி விடிய, விடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவையொட்டி 108 சங்காபிஷேகம், 108 கலச அபிஷேகம், லிங்கோத்பவ பூஜை மற்றும் வருஷாபிஷேக ஹோமம் ஆகியவை நடைபெற்றன.
கோவிலில் உள்ள 16 முகங்களை கொண்ட சோடஷலிங்கத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பால் குடம் எடுத்த பக்தர்கள்

இதற்கிடையே கடந்த 2-ந்தேதி முதல் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவராத்திரியையொட்டி விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பால்குடத்தில் இருந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.


Next Story