அரசு பள்ளியில் திருட்டு
அரசு பள்ளியில் திருட்டு
வாடிப்பட்டி
வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரவு காவலராக கோபி (வயது 35) என்பவர் பணி செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 2 மணிக்கு பள்ளி வளாகத்தில் ரோந்து சென்றார். அப்போது தலைமை ஆசிரியர் அறை பூட்டு உடைத்து திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து ஆவணங்கள், நோட்டு புத்தகங்கள் சிதறி கிடந்தது தெரியவந்தது. உடனே கோபி தலைமை ஆசிரியருக்கு தகவல்தெரிவித்தார். அதன் பின் அவர் வந்து பார்வையிட்ட போது கண்காணிப்பு ேகமரா மற்றும்பட பதிவு கருவியும் திருடு போனது தெரிய வந்தது. இது சம்பந்தமாக தலைமையாசிரியர் சரவணன் முருகன்கொடுத்த புகாரின் பேரில்வாடிப்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.
Related Tags :
Next Story