கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி


கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 13 March 2021 1:56 AM IST (Updated: 13 March 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை
மதுரை யாதவர் கல்லூரி தமிழ் உயராய்வு மையத்தின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி கண்ணனேந்தலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சேகர் தலைமை தாங்கினார். தமிழ் உயராய்வு மையத்தின் தலைவர் பரந்தாமன் வரவேற்றார். இதில் கண்ணனேந்தல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 150 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ் உயராய்வு மைய பேராசிரியர்கள், சமூக ஆர்வலர் பாரதி செய்திருந்தனர். முடிவில் தமிழ் உயராய்வு மைய பேராசிரியர் நடராசன் நன்றி கூறினார்.

Next Story