தலமலை வனப்பகுதியில் நடுரோட்டில் நின்ற யானை


தலமலை வனப்பகுதியில் நடுரோட்டில் நின்ற யானை
x
தினத்தந்தி 13 March 2021 2:03 AM IST (Updated: 13 March 2021 2:03 AM IST)
t-max-icont-min-icon

தலமலை வனப்பகுதியில் நடுரோட்டில் யானை நின்றது.

தலமலை வனப்பகுதியில் நடுரோட்டில் யானை நின்றது.
திம்பம் செல்லும் சாலை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன இந்த வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தலமலை வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதி வழியாக தலமலையில் இருந்து திம்பம் செல்லும் சாலை அமைந்துள்ளது. வனவிலங்குகள் இந்த சாலையை அடிக்கடி கடந்து செல்வது வழக்கம்.
ஒற்றை யானை
இந்த நிலையில் நேற்று தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. ராமர் அணை அருகே உள்ள தலமலை வனப்பகுதி சாலையில் சென்றபோது ஒற்றை யானை நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது. இதனால் டிரைவர் பஸ்சை சற்று தூரத்திலேயே நிறுத்தி கொண்டார். சுமார் 30 நிமிடம் யானை ரோட்டில் அங்கும், இங்குமாக சுற்றி திரிந்தது. அதன்பின்னர் தானாகவே வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
இதனால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘இந்த சாலை வழியாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும்’ என்றனர்.

Related Tags :
Next Story