மொபட்டில் கொண்டு வரப்பட்ட 155 மதுபாட்டில்கள் பறிமுதல்
மொபட்டில் கொண்டு வரப்பட்ட 155 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த மர்மநபர், அந்த பகுதியில் இருந்த மதுபான கூடத்தில் வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை கொண்டு வந்திருந்தார். இதனை கண்ட தேர்தல் பறக்கும் படையினர் அவரை பிடிக்க முயன்றபோது, அந்த நபர் மொபட்டையும், மது பாட்டில்களையும் போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து 155 மதுபாட்டில்களையும், மொபட்டையும் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், அவற்றை பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story