100 சதவீதம் வாக்களிப்பது குறித்து மினி மாரத்தான்


100 சதவீதம் வாக்களிப்பது குறித்து மினி மாரத்தான்
x
தினத்தந்தி 13 March 2021 2:07 AM IST (Updated: 13 March 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

100 சதவீதம் வாக்களிப்பது குறித்து மினி மாரத்தான் நடைபெற்றது.

பெரம்பலூர்:
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மினி மாரத்தான் போட்டி பெரம்பலூரில் நேற்று நடந்தது. பாலக்கரை ரவுண்டானா அருகே புறப்பட்ட இந்த மாரத்தானை பெரம்பலூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான ஸ்ரீவெங்கட பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தானில் கலந்து கொண்டவர்கள் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். ஊர்வலம் வெங்கடேசபுரம், ரோவர் வளைவு, சங்குபேட்டை, கடைவீதி, அரசு மருத்துவமனை, பழைய பஸ் நிலையம் வழியாக சென்று தாலுகா அலுவலகத்தில் முடிவடைந்தது.

Next Story