பிரபல திருடர்கள் 2 பேர் கைது
நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 பிரபல கொள்ளையர்களை தனிப்படை பேரலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 பிரபல கொள்ளையர்களை தனிப்படை பேரலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
நாகர்கோவிலில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருட்டு போயின. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராபர்ட் ஜெயின், சரவணகுமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு திருடர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
நேற்று இரவு தனிப்படை போலீசார் பீச்ரோடு பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகத்தின் அடிப்படையில் 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
பிரபல கொள்ளையர்கள் கைது
அப்போது, அவர்கள் வைத்திருந்த கைப்பையில் பல்வேறு எலக்ட்ரிக்கல் பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் சாவிகள் ஏராளமாக இருந்தன. அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால், 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதாவது, பிடிப்பட்டவர்கள் மார்த்தாண்டத்தை சேர்ந்த பிரபாகரன்(வயது44), மதுரையை சேர்ந்த ஆஸ்டின் இன்பராஜ் என்பதும், இவர்கள் நாகர்கோவிலில் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிளை கள்ளச்சாவி போட்டு திருடி, பல்வேறு மாவட்டங்களில் குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளனர். மேலும், மோட்டார் சைக்கிள்கள் விற்ற பணத்தில் சொகுசு வாழ்கையும் வாழ்ந்து வந்துள்ளனர்.
10 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு
இதனைதொடர்ந்து பிரபாகரன், ஆஸ்டின் இன்பராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
Related Tags :
Next Story