விராலிமலை சட்ட மன்ற தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரச்சாரம்


விராலிமலை சட்ட மன்ற தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரச்சாரம்
x
தினத்தந்தி 13 March 2021 3:30 PM IST (Updated: 13 March 2021 3:40 PM IST)
t-max-icont-min-icon

விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரத்தை தொடங்கினார்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் போட்டியிடுகிறார். அவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் ஆகும்.இவர் கடந்த இரண்டு முறை விராலிமலை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சரானார். தற்போது மூன்றாவது முறையாக இதே தொகுதியில்களம் காண்கிறார்.

இந்தநிலையில் கடந்த 10-ந் தேதி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் தனது குலதெய்வமான குண்டூர் பாலடியான் கோவிலில் சாமிதரிசனம் செய்தார். பின்னர் ராப்பூசல், திருவப்பூர், இலுப்பூர், திருவேங்கை வாசல் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்த அமைச்சர் விஜய பாஸ்கர் நேற்று மதியம் முக்கண்ணாமலைப்பட்டி, இலுப்பூரில் உள்ள பள்ளிவாசல்களுக்கு சென்று முஸ்லிம்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

அதனைத்தொடர்ந்து மாலை அன்னவாசல் ஒன்றியம் கோதண்டராமபுரம் ஊராட்சி கீழபளுவஞ்சியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அவர் மயிலாப்பட்டி, கிளாப்பட்டி, பெருமநாடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.
அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்தனர். 

பின்னர், தொகுதி யில் தான் செய்த சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி அமைச்சர் வாக்கு சேகரித்தார். மேலும் அமைச்சர் விஜயபாஸ்கரின் மகள் பிரியதர்சினி தனது தந்தைக்காக பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில், அன்னவாசல் ஒன்றிய குழுத்தலைவர் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story