அ.இ.அ.தி.மு.க.வின் ஹாட்ரிக் வெற்றி உறுதி; எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி - முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேட்டி


அ.இ.அ.தி.மு.க.வின் ஹாட்ரிக் வெற்றி உறுதி; எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி -  முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேட்டி
x
தினத்தந்தி 13 March 2021 3:30 PM IST (Updated: 13 March 2021 3:39 PM IST)
t-max-icont-min-icon

அ.இ.அ.தி.மு.க.வின் ஹாட்ரிக் வெற்றி உறுதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறினார்.

கோபால்பட்டி,

தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. ஹாட்ரிக் வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்  தனிப்பெரும்பான்மையு டன் ஆட்சி அமைப்பது உறுதி என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறினார்.

அ.இ.அ.தி.மு.க.வின் நத்தம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக 5 வது முறையாக  முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் இரா.விசுவநாதன் போட்டியிட உள்ளார் இதனையடுத்து நேற்று காலை வேம்பார் பட்டியில் உள்ள அவரது  இல்லத்தில் மாவட்டத்தின்  பல்வேறு பகுதிகளிலிருந்து அ.தி.மு.க. கட்சி நிர்வாகி கள்,தொண்டர்கள் திரளாக வந்து வெற்றிலை மாலை அணிவித்தும் , சால்வை , பூங்கொத்துகளை கொடுத்தும் வாழ்த்துக்களை தெரிவித்த னர்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நத்தம் விசுவநாதன் கூறியதாவது:-

இந்தியாவின்  பிரதமர் நரேந்திரமோடி  மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார் அ.இ.அ.தி.மு.க, பா.ஜ.க,  பா.ம.க,  தமிழ்மாநில காங்கிரஸ்  உள்ளிட்ட அ.இ. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் நடை பெறும் சட்டமன்ற தேர்தலில் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெரும். அ.இ.அ.தி.மு.க.தனிப்பெரும்பான்மையுடன் ஹாட்ரிக்  வெற்றி பெற்று முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் பொற்கால ஆட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி , துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைப்பது உறுதி.

நத்தம் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை எண்ணற்ற வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக ரூ.636 கோடியில் நத்தம் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்து அதே ஆட்சி காலத்தில் திட்ட மதிப்பீடு தயார் செய்து, டெண்டர் விடப்பட்டு பணிகள் முடி வடைந்து நத்தம் தொகுதி யிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகமும் செய்யப்பட்டது மிகப்பெரிய சாதனை. 

மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் தொகுதிக்குட்பட்ட இடத்தில் மாவட்ட மக்களின் நீண்ட கால கனவான அரசு மருத்துவக்கல்லூரிக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, தற்போதய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. விரைவில் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

இதேபோல் நத்தம்  பேருந்து நிலையம் விரிவாக்கம், நத்தத்தில் நீதிமன்றம் , வட்டார போக்குவரத்து அலுவலகம், நத்தம் நல்லாகுளம்  தூர்வாரி அழகுபடுத்தி சீரமைப்பு பணி,தொகுதி முழுவதும் புதிய தார் சாலைகள், மற்றும்  திண்டுக்கல் நத்தம் இடையே  தார் சாலை அகலப்படுத்தும் பணி  , கிராமங்களில் தெருக்க ளில் வண்ணக்கல்,சிமெண்ட் சாலைகள்,மின் விளக்கு வசதி, கல்வித்துறையை பொருத்த வரை தொகுதியில் அரசு நடுநிலைபள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாகவும், உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைபள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.


மேலும் தேவையான பள்ளிகளுக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், ஆய்வகங்கள்,குடிநீர் வசதி, கிராமப்புற சுகாதார வசதியை மேம்படுத்த பல கிராமங்களில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், குறைந்த கட்டணத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்திட அனைத்து ஊராட்சிகளிலும் அம்மா திருமண மண்டபங்கள், நிலத்தடி நீர் மட்டத்தையும், குடிநீர் ஆதாரத்தை பெருக்கிட  இப்பகுதியில் பாயும் திருமணிமுத்தாறு, சந்தான வர்த்திணி ஆறுகளில் தேவையான இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய ரேசன் கடைகள், வருவாய்துறை அலுவலக கட்டிடங்கள், பத்திரபதிவு அலுவலகங்கள், ஆன்மீக பணிகளாக நத்தம் மாரியம்மன் கோவில், திருமலைக்கேணி முருகன் கோவில் உள்பட  தொகுதியிலுள்ள மும்மத ஆலயங்களில் பக்தர்களின் வசதிக்காக கட்டிட பணிகள், சாலை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோன்ற எண்ணற்ற வளர்ச்சி, உட்கட்டமைப்பு பணிகள் தொகுதி  முழுவதும் அனைத்து அரசு துறைகளின் வாயிலாக நடைபெற்றுள்ளது.

தி.மு.க ஆட்சியில் மின்சார துறையின் இருண்ட காலமாக இருந்த தமிழகத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தனது நிர்வாக திறமையால்  சீரமைத்து தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றினார்.அதன் ஒரு பகுதியாக நத்தம் தொகுதியில் அடுத்த 20 ஆண்டுகளில் ஏற்படும் மின் தேவையை கருத்தில் கொண்டும் விவசாய மின் மோட்டார்கள் குறைந்த மின் அழுத்தத்தால் பழுது ஏற்படாத வண்ணம்  புதிய துணை மின் நிலையங்கள், டிரான்ஸ்பார்ம்கள் தரம் உயர்த்துதல், புதிய மின் கம்பங்கள் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப் பட்டன இதன் விளைவாக விவசாய மின் இணைப்பு, வீடுகளில் மின் பற்றாக்குறை இல்லாத சீரான மின் விநியோகம் உள்ளது. கிருஸ்தவ தேவலாயங்கள் உள்ள பல கிராமங்களில் சம்பந்தப்பட்ட சமுதாய மக்களின் கோரிக்கையை ஏற்று திருவிழா காலங்களில் சப்பர ஊர்வலம் நடைபெறும் சாலைகளில்  மின்சார வயர்களை தரையில் பதித்து புதைவட மின்வயர் களாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது .

கடந்த 35 ஆண்டுகளாக நத்தம் தொகுதியின் மக்களின் அன்பை யும், பேராதரவினை யும் பெற்று  தொகுதிக்கு பல வளர்ச்சி  பணிகளை செய்துள்ளோம். மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி தொகுதி மக்களின்  அனைத்து சுக, துக்கங்களில் பங்கெடுத்து  மக்களோடு மக்களாக வாழ்ந்து வருகிறேன்.நடைபெறும் தேர்தலிலும் நாங்கள் செய்த வளர்ச்சி பணிகளை சொல்லி வாக்கு கேப்போம் தொடர்ந்து   நத்தம் தொகுதி மக்களின் பேராதரவுடன் அமோக வெற்றி பெருவோம்.

எதிர் அணியிலுள்ள தி.மு க.வினர் கடந்த 5 ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக எந்த ஒரு வளர்ச்சி பணியையும் தொகுதிக்கு செய்யவில்லை என்ன சொல்லி வாக்கு கேட்பது என்று தெரியாமல் எங்கள் மீது அவதூறாக பேசி வருகின்றனர் அவர்கள் நடைபெறும்  தேர்தலில் மக் களால் நிராகரிக்கப் படுவார்கள் என முன்னாள் அமைச்சர் விசுவநாதன் தெரிவித்தார்.

Next Story