அவினாசி வாக்குச்சாவடியில் மின்னணு அடையாள அட்டைபெறும் முகாம் கலெக்டர் ஆய்வு
மின்னணு அடையாள அட்டைபெறும் முகாம்
அவினாசி
அனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்கு விவரங்களை அறிந்துகொள்ள ஏதுவாக இ-எபிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாக்காளர்கள் தங்களது மின்னணு அடையாள அட்டையை
மிக எளிதில் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான முகாம் அவினாசியில் உள்ள அரசு பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதனை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில் “சிறப்பு முகாமில் 18 வயது பூர்த்தியானவர்கள் யுனிக்யு மொபைல் எண்ணை பயன்படுத்தி வாக்காளர்பட்டியலில் இணைத்துக் கொண்ட இளம் வாக்காளர்கள் அனைவரும் தங்களது இ- எபிக்-கை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என்றார்.
Related Tags :
Next Story