தேர்தல் விதிமீறல்; 29 வழக்குகள் பதிவு
தேர்தல் விதிமீறல் தொடர்பாக 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து விதிமீறல்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி மாவட்டத்தில் நேற்று முன்தினம் தேர்தல் விதிகளை மீறியதாக அ.தி.மு.க. மீது ஒரு வழக்கும், தி.மு.க. மீது 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை மாவட்டத்தில் அ.தி.மு.க. மீது 10 வழக்குகளும், அ.ம.மு.க. மீது 2 வழக்குகளும், தி.மு.க. மீது 5 வழக்குகளும், பா.ஜ.க. மீது 2 வழக்குகளும், எஸ்.டி.பி.ஐ. மற்றும் நாம்தமிழர் கட்சி, நம் இந்தியா ஆகிய கட்சிகளின் மீது தலா ஒரு வழக்கும், இதர கட்சியினர் மீது 7 வழக்குகளும் என மொத்தம் 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story