ஊதியூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
காங்கேயம்
திருப்பூரை அடுத்துள்ள கொடுவாய் அருகே பள்ளிபாளையம், கோட்டைமேட்டைச் சேர்ந்தவர் பழனி இவர் கூலிவேலை செய்து வருகிறார். இவரது மகன் கார்த்தி (வயது30), இவர் சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தார். அதனால் இவருக்கு திருமணம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கார்த்தி நேற்று காலை கொடுவாய் சந்தைப் பேட்டை அருகேயிருந்த புளிய மரத்தில் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து ஊதியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த ஊதியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story