கடலில் மிதந்து வந்த கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்
வேளாங்கண்ணி அருகே கடலில் மிதந்து வந்த கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே கடலில் மிதந்து வந்த கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலில் மிதந்து வந்த கஞ்சா பொட்டலங்கள்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே காமேஸ்வரத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது காமேஸ்வரத்தில் இருந்து இரண்டு நாட்டிக்கல் மைல் தூரத்தில் இரண்டு பாலித்தீன் பை பொட்டலங்கள் மிதந்து வந்ததை பார்த்தனர்.
இதனையடுத்து மீனவர்கள் அந்த பைகளை எடுத்து வந்து கீழையூர் கடலோர காவல் படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த பாலித்தீன் பைகளை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் ஒவ்வொரு பையிலும் 2 கிலோ அளவில் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
பறிமுதல்
இதனைத்தொடர்ந்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. கஞ்சாவை இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக படகில் கொண்டு சென்றபோது தவறி விழுந்ததா? அல்லது யாராவது கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு வரும்போது போலீசாரை கண்டவுடன் வீசிவிட்டு சென்றனரா? என பல்வேறு கோணங்களில் கடலோர காவல் படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story