தேசிய அளவிலான தடகள போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு
தேசிய அளவிலான தடகள போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற நீலகிரி மாவட்டம் மாணவருக்கு கல்லூரி முதல்வர், உடற்கல்வி பயிற்றுநர்கள் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
ஊட்டி,
கேரள மாநிலம் கோழிக்கோடு பல்கலைக்கழகம் சார்பில் தேசிய அளவிலான தடகள போட்டி, கோழிக்கோட்டில் நடைபெற்றது. போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பீகார் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கொரோனா பரிசோதனைக்கு பிறகு வீரர்கள் போட்டிக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வரும் சுருதனும் பங்கேற்றார். அவர் 10 ஆயிரம் மீட்டர் ஓட்ட பந்தயத்தில் 2-வது இடம் பிடித்தார்.
அந்த தூரத்தை 30 நிமிடங்கள் 46 நொடிகளில் கடந்தார். அவருக்கு வெள்ளி பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. அவர் ஊட்டி எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டவர் ஆவார். தேசிய அளவிலான தடகள போட்டியில் 2-வது இடம் பிடித்த மாணவருக்கு கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி, உடற்கல்வி பயிற்றுநர்கள் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story