2 இடங்களில் வேட்பு மனு அளிக்கலாம்


2 இடங்களில் வேட்பு மனு அளிக்கலாம்
x
தினத்தந்தி 13 March 2021 9:49 PM IST (Updated: 13 March 2021 9:49 PM IST)
t-max-icont-min-icon

திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு 2 இடங்களில் வேட்பு மனு அளிக்கலாம்.

தொண்டி, 
திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு வேட்பு மனு அளிப்பவர்கள் ராமநாதபுரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான மரகதநாதன் மற்றும் தேர்தல் நடத்தும் முதன்மை உதவி தேர்தல் அலுவலர் திருவாடானை தாசில்தார் செந்தில் வேல்முருகன் ஆகியோரிடமும் வழங்கலாம். தேர்தல் விதிமுறை மீறல்களை தடுக்கும் வண்ணம் திருவாடானை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அறையிலும் வளாகத்திலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது 100 மீட்டருக்கு உள்ளே 2 வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். வேட்பு மனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர் மற்றும் 2 நபர்கள் மட்டுமே உடன் இருக்க வேண்டும். வேட்பாளரின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் யாரும் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்து கொள்ளாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Next Story