எட்டயபுரம் அருகே கணவரை பிரிந்து வாழ்ந்த நர்ஸ் தற்கொலை
எட்டயபுரம் அருகே கணவரை பிரிந்து வாழ்ந்த நர்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே ஜமீன் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் வேலு கிருஷ்ணம்மாள் மகள் முருகசெல்வி (வயது 23). நர்சான இவர் தேனி மாவட்டம் சுருளிபட்டியைச் சேர்ந்த ஜெகதீசனை காதலித்து கடந்த 28-9-2020 அன்று திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக முருகசெல்வி கணவரை விட்டு பிரிந்து, பெற்றோரின் வீட்டுக்கு வந்து விட்டார்.
பின்னர் எட்டயபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் முருகசெல்வி வீட்டின் கழிவறையில் உள்ள கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், எட்டயபுரம் போலீசார் விரைந்து சென்று, முருகசெல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story