மயானக்கொள்ளை உற்சவம்


மயானக்கொள்ளை உற்சவம்
x
தினத்தந்தி 13 March 2021 11:59 PM IST (Updated: 13 March 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

திருச்சம்பள்ளி அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பொறையாறு:
திருச்சம்பள்ளி அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அங்காள பரமேஸ்வரி கோவில்
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே திருச்சம்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காளபர மேஸ்வரிகோவில் உள்ளது. இந்த கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நேற்று மாலை நடந்தது.  
இதையொட்டி முதல் நாள் காவிரியில் இருந்து புனிதநீர் எடுத்துவந்து கலச பூஜை, கணபதி யாகம், நவக்கிரக யாகம், லெட்சுமி யாகம் ஆகியன நடந்தன.
தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து சக்தி கரகத்துடன் அங்காளம்மன், பேச்சியம்மன், வீரபத்திரர் சாமி வீதியுலா காட்சி நடந்தது. 2-வது நாள் பெண்கள் பலரும் பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும் வழிபாடு நடத்தினர்.
மயானக்கொள்ளை நிகழ்ச்சி
3-வது நாளான நேற்று மதியம் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை மேள-தாளத்துடன் பரிவார தெய்வங்களோடு அம்மன் வீதி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து கோவிலின் அருகே உள்ள மயானத்திற்கு அம்மனை எழுந்தருள செய்து மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. 
அப்போது பல்வேறு வேடம் அணிந்த பக்தர்கள் மயானத்தில் வேக வைத்து கொட்டப்பட்டிருந்த தானியங்களை அள்ளி அனைவருக்கும் வழங்கினர்.
பின்னர் புராண நாடகம் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story