மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்களிப்பது குறித்து செயல்விளக்கம்
முதல்முறை வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிால் வாக்களிப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை
முதல்முறை வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிால் வாக்களிப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் கலெக்டரால் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 25 ஆயிரத்து 289 ஆண்கள், 30 ஆயிரத்து 426 பெண்கள், 22 மூன்றாம் பாலினத்தவர் என 55 ஆயிரத்து 737 வாக்காளர்கள் முதல் முறை வாக்களிக்க உள்ளவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள நடுநிலைப்பள்ளியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்களிப்பது குறித்து முதல் முறை வாக்களிக்க உள்ள இளைஞர்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
அப்போது திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், உதவி கலெக்டருமான வெற்றிவேல் தலைமை தாங்கி மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி குறித்து விளக்கி கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம், தாசில்தார் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story