வேந்திஅம்மன் கோவிலில் பூஜை பொருட்கள் ஏலம்


வேந்திஅம்மன் கோவிலில் பூஜை பொருட்கள் ஏலம்
x
தினத்தந்தி 14 March 2021 1:01 AM IST (Updated: 14 March 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

வேந்திஅம்மன் கோவிலில் பூஜை பொருட்கள் ஏலம்

பொன்னமராவதி
வேந்தி அம்மனுக்குசிறப்பு பூஜை
பொன்னமராவதி ஒன்றியம், வேந்தன்பட்டியில் உள்ள வேந்திஅம்மனுக்கு சிவராத்திரியையொட்டி சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்றன. பின்னர் பூஜை பொருட்கள் ஏலம் விடப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். குறிப்பாக அம்மனின் குத்து விளக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை ஏலம் போனது. இதேபோல, உப்பு வாளி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அதிக விலைக்கு ஏலம் போயின.
சாத்தைய்யனார் கோவில்
இதேபோல, அரிமளம் ஒன்றியம் கீழாநிலைக்கோட்டை அருகே பழைய மாங்குடியில் உள்ள சொம்புக சாத்தைய்யனார் கோவிலில் மகாசிவராத்திரியைெயாட்டி பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தனர். விழாவையொட்டி சொம்புக சாத்தைய்யனார் மற்றும் அலத்திகாரி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. விழாவையொட்டி அன்னதானம் நடைபெற்றது.
இதேபோல, மாங்குடி சாத்தைய்யனார் கண்மாய் கரையில் அமைந்துள்ள பழைய மாங்குடி சாத்தைய்யனார், அம்பாளுக்கு 11 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அன்று மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது. இதேபோல, கீழாநிலைக்கோட்டை அருகே உள்ள புது மாங்குடி சாத்தனார் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. 3 கோவில்களில் நடைபெற்ற திருவிழாவை ஒட்டி அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.
வடகாடு-திருவரங்குளம்
வடகாடு அருகேயுள்ள மாங்காட்டில் பழமை வாய்ந்த சிவன் கோவிலில் ஒன்றான விடங்கேஸ்வரர் கோவிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பெருங்களூர் கிராமத்தில் உள்ள மங்களநாயகியம்மன் உடனுறை வம்சோத்தாரகர் சிவாலயத்தில் மகாசிவராத்திரியையொட்டி நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. 
 திருவரங்குளம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தென்காசி முத்துமாரியம்மன் கோவில், பூந்தோட்டம் ஏழுமுககாளியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருவரங்குளத்தில் வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோவிலில் இரவு விடிய விடிய 5 கால பூஜைகள் நடைபெற்றன. இதேபோல் காசிக்கு வீசம் கூட என்றழைக்கப்படும் திருவுடையார்பட்டி திருமூலநாதர் கோவில், திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர் கோவில், விஜி ரெகுநாதபுரம் சிவன் கோவில், பாலையூர் பழங்கரை சிவன் கோவில், குளவாய்பட்டி சிவன் கோவில், மணியம்பலம் சிவன் கோவில், திருமலை ராய சமுத்திரம் கதிர் காமேஸ்வர காமேஸ்வரி கோவில், பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோவில், கீழக்கோட்டை ஆதி முனீஸ்வரர் கோவில், காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது.

Next Story