முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
பொன்னமராவதி
பொன்னமராவதி அருகே உள்ள ஏழு ஊர் மாரியம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதியில் உள்ள ரெட்டியாபட்டி, மூலங்குடி, செம்பூதி, செவலூர், ஆலவயல், பொன்னமராவதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிலிருந்து ஏராளமான பக்தர்கள் பூத்தட்டுகள் மற்றும் பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், இன்ஸ்பெக்டர் தனபால் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story