கிணற்றில் மூழ்கி மாணவர் பலி


கிணற்றில் மூழ்கி மாணவர் பலி
x
தினத்தந்தி 14 March 2021 1:21 AM IST (Updated: 14 March 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் மூழ்கி மாணவர் பலியானார்.

அச்சன்புதூர்:

ஊத்துமலை அருகே உள்ள மேலக்கலங்கல் தெற்கு தெருவை சேர்ந்தவர் காளிமுத்து மகன் பேச்சிமுத்து (வயது 17). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். சம்பவத்தன்று கடையநல்லூர் அருகே உள்ள பெரியநாயகம் கோவிலுக்கு சிவராத்திரியை முன்னிட்டு குடும்பத்துடன் சாமி கும்பிட வந்தனர். 
அப்போது அங்குள்ள கிணற்றில் பேச்சிமுத்து தனது நண்பர்களோடு குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அவர் நீரில் மூழ்கி பலியானார்.
கடையநல்லூர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று, பேச்சிமுத்து உடலை மீட்டனர். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story