விழிப்புணர்வு பேரணி


விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 14 March 2021 1:28 AM IST (Updated: 14 March 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

விழிப்புணர்வு பேரணி

ராஜபாளையம், 
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், ஜமீன் கொல்லங் கொண்டான் ஊராட்சியில் 100 சதவீத வாக்கு அளிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், சத்தியவதி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 
அதேபோல் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், மீனாட்சி புரம் ஊராட்சியில் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்கு அளிப்பது தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி, உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சி மற்றும் கோலப்போட்டி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதேபோல சேத்தூர் அருகே உள்ள சோலைசேரி கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் வைரமுத்து தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பஞ்சாயத்து துணைத்தலைவர் முத்துமாரி, வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story