பணம் வாங்காமல் வாக்களிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்


பணம் வாங்காமல் வாக்களிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்
x

பணம் வாங்காமல் வாக்களிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

பெரம்பலூர்:
பெரம்பலூரில், இளைஞர்கள் இயக்கத்தின் சார்பில், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்தும், பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்றும் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கையெழுத்து இயக்கம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சத்யா தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தேர்தல் விழிப்புணர்வு பிரிவு தாசில்தார் நூர்ஜகான் கலந்து கொண்டு கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத் (நெடுஞ்சாலை போக்குவரத்து), கார்த்திகேயன் (நகர போக்குவரத்து), சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி, கல்லூரியின் தேர்தல் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளரும், பேராசிரியருமான சந்திரமவுலி மற்றும் பெரம்பலூர் இளைஞர்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், வாக்காளர்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். முன்னதாக அவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Next Story