தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை


தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 14 March 2021 1:41 AM IST (Updated: 14 March 2021 1:41 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

குன்னம்:
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் குன்னம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் 3 இடங்களில் வாகன சோதனையில் தீவிர ஈடுபட்டு வருகின்றனர். 
இதில் குன்னம் அருகே ஒதியம் பிரிவு சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி தலைமையில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார், வேன், லாரி, பஸ் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவற்றை நிறுத்தி அதில் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் உள்ளதா? என்று சோதனையிட்டனர். அப்போது அதிவேகமாக வந்த கார் டிரைவரிடம் சீட் பெல்ட் அணியுமாறும், சீரான வேகத்தில் செல்லுமாறும், அதிக பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.

Next Story