கே.வி.குப்பம்;பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு
கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார்.
கே.வி.குப்பம்
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளாக கருதப்படும் செஞ்சி, அரும்பாக்கம், லத்தேரி, அன்னங்குடி, சென்னங்குப்பம், தேவரிஷிகுப்பம், கீழ்முட்டுக்கூர், பி.கே.புரம் ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், தாசில்தார்கள் ராஜேஸ்வரி, வத்சலா, துணை தாசில்தார்கள் பலராமன், கலைவாணி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story