வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
அருப்புக்கோட்டை,
100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தின் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் அருப்புக்கோட்டையில் 100 சதவீத வாக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் இந்த பேரணியை கலெக்டர் கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், ஆர்.டி.ஓ. முருகேசன், தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story