திருச்சி மேற்கு தொகுதியில் பரபரப்பு: அ.தி.மு.க. வேட்பாளருக்கு எதிராக நிர்வாகிகள் திடீர் போர்க்கொடி
திருச்சி மேற்கு தொகுதியில் அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க. வேட்பாளருக்கு எதிராக நிர்வாகிகள் திடீர் போர்க்கொடி தூக்கி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மேற்கு தொகுதியில் பரபரப்பு:
அ.தி.மு.க. வேட்பாளருக்கு எதிராக நிர்வாகிகள் திடீர் போர்க்கொடி
திருச்சி, மார்ச்.14-
திருச்சி மேற்கு தொகுதியில் அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க. வேட்பாளருக்கு எதிராக நிர்வாகிகள் திடீர் போர்க்கொடி தூக்கி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேட்பாளருக்கு எதிராக போர்க்கொடி
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் கடந்த 10-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் ஒரு சில சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க. வேட்பாளருக்கு எதிராகவும், வேட்பாளரை மாற்றக்கோரியும் ஆங்காங்கே அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக களம் இறக்கப்பட்ட மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பத்மநாதனுக்கு எதிராக நிர்வாகிகள் திடீர் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
இதுகுறித்து திருச்சி அ.தி.மு.க.பகுதி செயலாளர் ஞானசேகர் தலைமையில், வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் சிலர் திரண்டு வந்து நேற்று காலை நிருபர்களிடம் கூறியதாவது:-
கட்சிக்காக உழைக்கவில்லை
திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பத்மநாதன் மீது கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதுவரை அவர் கட்சிக்காக உழைக்கவில்லை. பொதுமக்களுக்கு எந்தவித நலத்திட்டங்களையும் செய்யவில்லை. அவருக்கு சீட் வழங்கப்பட்டது எப்படி? என்பது தெரியவில்லை.
அவர் மீது தனிப்பட்ட கோபம் கிடையாது. வேட்பாளருக்கு எதிராக கீழ்மட்ட தொண்டர்களின் எதிர்ப்பை தான் இங்கு வெளிப்படுத்துகிறோம். அதேநேரம் நாங்கள் கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்போம். மேற்கு தொகுதி வேட்பாளரை மாற்றினாலும் சரி அல்லது இதே வேட்பாளரே போட்டியிடுவார் என தலைமை அறிவித்தாலும் சரி அதற்கு கட்டுப்பட்டு பணியாற்ற தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சி மேற்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story