வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி


வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 14 March 2021 2:08 AM IST (Updated: 14 March 2021 2:08 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) துரை நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு தேர்தல் அழைப்பிதழ்களை வழங்கி முதன் முறையாக வாக்களிக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.கல்லூரி நுழைவு வாயிலில் வரிசையாக நின்ற மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியிருந்தனர். 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் பேராசிரியர் வேலாயுத ராஜா செய்திருந்தார்

Next Story