துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு
சட்டமன்ற தேர்தலையொட்டி கொடைக்கானலில் துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது.
கொடைக்கானல்:
வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் நடத்திய கொடி அணிவகுப்பு ஊர்வலம் கொடைக்கானலில் நடந்தது.
பொதுமக்கள் அச்சமின்றி வாக்களித்து 100 சதவீத வாக்குப்பதிவை எட்டும் வகையில் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது.
கொடைக்கானல் கே.ஆர்.ஆர். கலையரங்கம் பகுதியில் இருந்து தொடங்கிய அணிவகுப்பை, கூடுத ல் போலீஸ் சூப்பிரண்டு இனிகோ திவ்யன், போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கொடைக்கானல் ஏரிச்சாலை, 7 ரோடு சந்திப்பு, அண்ணாசாலை, மூஞ்சிக்கல் வழியாக அரசு மேல்நிலைப்பள்ளியை ஊர்வலம் வந்தடைந்தது.
பின்னர் அங்கு துணை ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது.
Related Tags :
Next Story