மாசித் திருவிழா பூச்சொரிதலுடன் தொடக்கம்


மாசித் திருவிழா பூச்சொரிதலுடன் தொடக்கம்
x
தினத்தந்தி 14 March 2021 2:41 AM IST (Updated: 14 March 2021 2:41 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா பூச்சொரிதலுடன் தொடங்கியது.

வடமதுரை:
வடமதுரை மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா நேற்று பூச்சொரிதலுடன் தொடங்கியது. இதையொட்டி தேரில் பூ அலங்காரத்தில் மாரியம்மன் வீதி உலா வந்தார். 

வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு மலர்களை தூவி வழிபாடு செய்தனர். விழாவில் வருகிற 21-ந் தேதி அம்மன் சாட்டுதலும், 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை அம்மன் உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 

28-ந்தேதி பூக்குழி இறங்குதலும், 30-ந்தேதி மஞ்சள் நீராட்டும், தொடர்ந்து அம்மன் கங்கையில் இறங்கும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. 

Next Story