8 ஆயிரம் தேர்தல் அலுவலர்கள் நியமனம்


8 ஆயிரம் தேர்தல் அலுவலர்கள் நியமனம்
x
தினத்தந்தி 14 March 2021 2:42 AM IST (Updated: 14 March 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 1,679 வாக்குச்சாவடிகளுக்கு 8 ஆயிரம் தேர்தல் பணி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறினார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 1,679 வாக்குச்சாவடிகளுக்கு 8 ஆயிரம் தேர்தல் பணி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறினார்.

தேர்தல் அலுவலர்கள் நியமனம்

நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி தேர்தல் பணியில் ஈடுபடுத்தபடவுள்ள தேர்தல் பணியாளர்கள் வாக்குப்பதிவின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த முதற்கட்ட பயிற்சி சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைகல்லூரியில் நடைபெற்றது.
இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு 1,679 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அதற்கேற்ப 1,679 வாக்குப்பதிவு மையங்களுக்கும் 8 ஆயிரத்து 59 தேர்தல் பணிக்கான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தொகுதி வாரியாக தேர்வு செய்யப்பட்ட தேர்தல் பணிக்கான அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி

இப்பயிற்சியின் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் இயக்குவது குறித்தும், படிவங்கள் வழங்குவதும் குறித்தும் மற்றும் தேர்தல் பணி தொடர்பான அனைத்துப்பணிகளுக்கும் எளிதாக பணியை மேற்கொள்ளும் வகையில் பயிற்சியாளர் மூலம் பயற்சி வழங்கப்படுகிறது.
பயிற்சி பெற்று செல்லும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கோவிட்- 19-க் கான தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கும் பொது சுகாதாரத்துறையின் மூலம் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புபவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் சிவகங்கை சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கழுவன், தேர்தல் பணிக்கான பொறுப்பு அலுவலர் வசந்தி, தாசில்தார்கள் தர்மலிங்கம், ஜெயந்தி, நிர்மலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story