இலங்கை அரசை கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


இலங்கை அரசை கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 March 2021 2:50 AM IST (Updated: 14 March 2021 2:50 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை அரசை கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இலங்கை அரசை கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
இலங்கை அரசை கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு கருங்கல்பாளையம் காந்திசிலை அருகில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு பொறுப்பாளர் கண.குறிஞ்சி தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த ரத்தினசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் ஜாபர், தந்தை பெரியார் திராவிடர் கழக பொறுப்பாளர் குமரகுருபரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி., திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர்மணி, தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
கோரிக்கைகள்
இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அரசின் இனப்படுகொலை உள்ளிட்ட குற்றங்களை பன்னாட்டு விசாரணைக்குழு மூலம் விசாரிக்க வேண்டும். ஈழத்தமிழர்களை சுட்டுக்கொன்ற இலங்கை அரசின் மீது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும். ஈழத்தமிழர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
ஈழத்தில் ராணுவமயம், சிங்களமயம், பவுத்தமயம் ஆகியவற்றை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற ஜெனீவாவில் தற்போது நடந்து வரும் ஐ.நா. சபை கூட்டத்தில் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். அதற்கு தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story