திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரி மீட்கும்போது கிரேன் மீது கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு


திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரி மீட்கும்போது கிரேன் மீது கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 14 March 2021 2:57 AM IST (Updated: 14 March 2021 2:57 AM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றது. மீட்பு பணியில் ஈடுபட்ட கிரேன் மீது அந்த லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றது. மீட்பு பணியில் ஈடுபட்ட கிரேன் மீது அந்த லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திம்பம் மலைப்பாதை 
சத்தியமங்கலத்தை அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் இந்த மலைப்பாதையானது திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இதனால் திம்பம் மலைப்பாதையில் தினமும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். 
ேமலும் இந்த மலைப்பாதையில் உள்ள 27 கொண்டை ஊசி வளைவுகளில் கனரக வாகனங்கள் திரும்ப முடியாமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும், பழுதாகி நிற்பதும் தினசரி நிகழ்வுகளாக மாறிவிட்டன. இதனால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியவில்லை. 
கிரேன் மீது லாரி கவிழ்ந்தது
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து சேலத்துக்கு கிரானைட் பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திம்பம் மலைப்பாதையின் 13-வது கொண்டை ஊசி வளைவில் நேற்று அதிகாலை 5 மணிஅளவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக பழுதாகி நின்றது. டிரைவர் எவ்வளவோ முயன்றும் லாரியை மேற்கொண்டு இயக்க முடியவில்லை. இதனால் மலைப்பாதையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை மீட்கும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் மீது லாரி கவிழ்ந்தது. 
போக்குவரத்து பாதிப்பு
இதனால் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கிரேன் மீது லாரி கவிழ்ந்ததால் மீட்கும் பணி நிறுத்தப்பட்டது. 
பின்னர் மற்றொரு கிரேன் பண்ணாரியில் இருந்து வரவழைக்கப்பட்டு மாலை 3 மணி அளவில் பழுதாகி நின்ற லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து வாகன போக்குவரத்து தொடங்கியது. 10 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர

Related Tags :
Next Story