வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக ஆய்வு


வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக ஆய்வு
x
தினத்தந்தி 14 March 2021 3:05 AM IST (Updated: 14 March 2021 3:05 AM IST)
t-max-icont-min-icon

கல்லல் பகுதியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக ெசன்று ஆய்வு நடத்தினார்கள்.

கல்லல்,

சட்டசபை  தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு   வாக்குச்சாவடியிலும்  பூத்திலும்  உள்ள  80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களையும் இறந்த வாக்காளர்களின் விவரங்களையும் கணக்கெடுக்கும் பணியில் வாக்குச்சாவடி அளவிலான அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வீட்டிலிருந்து தபால் ஓட்டுகள் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்களை கண்டறிய வீடு வீடாக சென்று வாக்குச்சாவடி அலுவலர்கள் தபால் ஓட்டுக்காக  பதிவு செய்து கையெழுத்து பெற்று வருகின்றனர். கல்லல் பகுதியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் இந்த பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். மேலும் சில பேர் நேரடியாக வாக்களிப்பதா? கூறுகின்றனர். தொடர்ந்து ஒவ்வொரு வாக்குச்சாவடியில் உள்ள இறந்த வாக்காளர்கள் விவரமும், வெளியூர், வெளிநாட்டில் உள்ள வாக்காளர்கள் குறித்தும் கணக்கெடுத்து வருகின்றனர்.


Next Story