கொங்கணாபுரம் வாரச்சந்தைக்கு ஆடு, கோழிகள் வரத்து அதிகரிப்பு
கொங்கணாபுரம் வாரச்சந்தைக்கு ஆடு, கோழிகள் வரத்து அதிகரித்து இருந்தது.
எடப்பாடி,
கொங்கணாபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமையில் வாரச்சந்தை கூடுகிறது. சந்தைக்கு கொங்கணாபுரம், எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் வளர்த்து வரும் ஆடு மற்றும் கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார். தற்போது எடப்பாடி, கொங்கணாபுரம் சுற்று வட்டார பகுதிகளில் காளியம்மன், மாரியம்மன் கோவில்களில் திருவிழா நடப்பதால், கொங்கணாபுரம் வாரச்சந்தைக்கு ஆடு, கோழிகள் வரத்து அதிகரித்து இருந்தது.
இதன்படி 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.5 ஆயிரத்து 500 முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்பனையானது. ஒரு நாட்டுக்கோழி ரூ. 250 முதல் ரூ.1000 வரை விற்பனையானது.
Related Tags :
Next Story