போத்தனூர் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
போத்தனூர் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு போனது.
போத்தனூர்,
கோவையை அடுத்த செட்டிபாளையம் அருகே உள்ள ராமர் தோட்டத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 56). விவசாயி. இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காந்திபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார்.
பின்னர் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 18 பவுன் நகையை காணவில்லை.
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீடு புகுந்து நகை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story