ஆத்தூரில் மயங்கி விழுந்து முதியவர் சாவு


ஆத்தூரில் மயங்கி விழுந்து முதியவர் சாவு
x
தினத்தந்தி 14 March 2021 5:00 PM IST (Updated: 14 March 2021 5:26 PM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் புதிய பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து முதியவர் இறந்துவிட்டார்.

ஆத்தூர்,

ஆத்தூர் புதிய பஸ் நிலையத்தில் நேற்று மாலை ஒரு தனியார் பஸ்சில் இருந்து வந்து இறங்கிய முதியவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மயக்கம் தெளிய வைக்க முயன்றனர். ஆனால் சில நிமிடங்களில் அவர் இறந்துவிட்டார். 

பின்னர் அவரது உடல் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story