டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை திடீர் அதிகரிப்பு குறித்து விசாரணைடாஸ்மாக் கடைகளில் மது விற்பனை திடீர் அதிகரிப்பு குறித்து விசாரணை
வேலூர் மாவட்ட எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை அதிகரித்துள்ளது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
குடியாத்தம்
வேலூர் மாவட்ட எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை அதிகரித்துள்ளது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
கலெக்டர் ஆய்வு
குடியாத்தம் தாலுகா கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில், ஆந்திர மாநில எல்லைப்பகுதியில் அமைந்துள்ள சைனகுண்டா சோதனை சாவடி மற்றும் பரதராமி சோதனை சாவடிகளிலும், பதற்றமான வாக்குப்பதிவு மையங்களாக கண்டறியப்பட்ட குடியாத்தம் அடுத்த ராமாலை மற்றும் கல்லப்பாடி மோட்டூர் பகுதிகளில் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு செல்வகுமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது சோதனை சாவடிகளில் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் அச்சமின்றி, பாதுகாப்புடன் வாக்களிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் (பயிற்சி) விஷ்ணுபிரியா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ராஜேஸ்வரி, வத்சலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாரி, நந்தகுமார், ஹேமலதா உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மது விற்பனை குறித்து விசாரணை
பின்னர் கலெக்டர் சண்முகசுந்தரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குடியாத்தம் மற்றும் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து ஆய்வு முடிக்கப்பட்டு தற்போது கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்து வருகிறோம். வேலூர் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லையில் 6 சோதனை சாவடிகள் உள்ளன. பரதராமி, பத்தலபள்ளி, கிறிஸ்டியன்பேட்டை ஆகிய மூன்று முக்கியமான சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.
வருவாய்த்துறையினர், காவல்துறையினர், போக்குவரத்து துறையினர் மற்றும் வணிக வரித்துறையினர் இணைந்து இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் தற்போது வரை ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் வாகன சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.5 லட்சத்து 39 ஆயிரம் உரிய ஆவணங்கள் சமர்பித்ததால் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. எல்லைப்பகுதியில் உள்ள மதுபான கடையில் தற்போது 15 முதல் 20 சதவீதம் வரை விற்பனை உயர்ந்து உள்ளது. அதற்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
---
Image1 File Name : 3144591.jpg
----
Reporter : T.N. KESAVALU Location : Vellore - GUDIYATHAM
Related Tags :
Next Story