கன்னங்குறிச்சியில் வீடுபுகுந்து திருடியவர் கைது


கன்னங்குறிச்சியில் வீடுபுகுந்து திருடியவர் கைது
x
தினத்தந்தி 14 March 2021 6:32 PM IST (Updated: 14 March 2021 6:39 PM IST)
t-max-icont-min-icon

கன்னங்குறிச்சியில் வீடுபுகுந்து திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

கன்னங்குறிச்சி,

கன்னங்குறிச்சி கேசவன் நகரைச் சேர்ந்தவர் ரேவதி. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவரது வீட்டில் 6 பவுன் நகை திருட்டு போனது. இது குறித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீசார் சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த முத்தையன் (வயது 38) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். 

இதில் அவர் ரேவதி வீட்டுக்குள் புகுந்து நகை திருடியதை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் முத்தையனை கைது செய்ததுடன், அவரிடம் இருந்த 6 பவுன் நகையை மீட்டனர்.

Next Story