ஆம்பூரில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு


ஆம்பூரில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 14 March 2021 6:34 PM IST (Updated: 14 March 2021 6:34 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூரில் தேர்தல் அலுவலர்களுக்கு நடந்த பயிற்சி வகுப்பை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.


ஆம்பூர்
ஆம்பூரில் தேர்தல் அலுவலர்களுக்கு நடந்த பயிற்சி வகுப்பை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் 335 வாக்குசாவடிகள் வரும் தேர்தலுக்காக தயாராகி வருகின்றனர். இந்த வாக்கு சாவடிகளில் 1198 தேர்தல் அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். இந்நிலையில் ஆம்பூர் பைபாஸ் 
பகுதியில் உள்ள அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளியில் நேற்று தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

மாவட்டக் கலெக்டர் சிவன் அருள் நேரில் சென்று ஆய்வு செய்து தேர்தல் குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்தகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story