கழுகுமலையில் துணை ராணுவத்தினர், போலீசார் கொடிஅணிவகுப்பு


கழுகுமலையில் துணை ராணுவத்தினர், போலீசார் கொடிஅணிவகுப்பு
x

கழுகுமலையில் துணை ராணுவத்தினர், போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.

கழுகுமலை:
சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்பதை வலியுறுத்தும் வகையில் கழுகுமலையில் துணை ராணுவப்படை மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது. கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலை கதிரவன் தலைமையில் நடந்த இந்த அணிவகுப்பானது பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அரண்மனை வாசல் தெரு, கீழ பஜார், தெற்கு ரத வீதி வழியாக சென்று போலீஸ் நிலையத்தை வந்து அடைந்தது. அணிவகுப்பில் துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story