கொக்கு மருந்து குடித்து கூலி தொழிலாளி பலி
கொக்கு மருந்து குடித்து விவசாயி பலியானார்.
காவேரிப்பாக்கம்
கொக்கு மருந்து குடித்து விவசாயி பலியானார்.
ஓச்சேரியை அடுத்த தச்சம்பட்டறை பகுதியை சேர்ந்தவர் ஹரி (வயது 43) கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு சங்கரன்பாடி சத்திரத்தில் உள்ள சத்திரமேடை வளாகத்தில் இருந்தார். அப்போது உடல் நலக்குறைவால் தவித்து வந்தார். இதனால் மனமுடைந்த ஹரி கொக்கு மருந்தை சாப்பிட்டு விட்டார்.
மயங்கி நிலையில் இருந்த அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு பாலுசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து ஹரியின் மகன் பரசுராமன் (21) அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story