தொழிலாளி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
விபத்தில் இறந்த தொழிலாளி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
போடி:
போடி அருகே தேவாரம் டி.கே.வி. பள்ளி தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் பால்பாண்டி (வயது 30). கூலித்தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் சாலை விபத்தில் வாகனம் மோதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் பால்பாண்டி மீது மோதிய வாகனத்தை கண்டுபிடிக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போடி தாசில்தார் செந்தில் அங்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது தாசில்தார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மோதிய வாகனத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார். இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
Related Tags :
Next Story