ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.53 லட்சம் பறிமுதல்


ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.53 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 14 March 2021 9:01 PM IST (Updated: 14 March 2021 9:01 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.53 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றதாக ரூ.53 லட்சத்து 56 ஆயிரத்து 690 பணம் இதுதவிர உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.11 ஆயிரத்து 550 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 94 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதில் 41 வழக்குகளில் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தவர்களின் ரூ.40 லட்சத்து 40 ஆயிரத்து 730 பணம் திருப்பி ஒப்படைக்கப்பட்டு உள்ளது. 6 வழக்குகளில் ரூ.4 ஆயிரத்து 630 மதிப்பிலான பொருட்கள் திருப்பி வழங்கப்பட்டு உள்ளது. மொத்தம் இதுவரை 47 வழக்குகளில் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தவர்களிடம் ரூ.40 லட்சத்து 45 ஆயிரதது 260 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

Next Story