மண்பானைகள் உற்பத்தி விறுவிறுப்பு
கோடை வெயிலுக்கு உடலை குளிர்விக்க மண்பானைகள் உற்பத்தி விறுவிறுப்பு அடைந்துள்ளது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே உள்ள ஆர்.பொன்னாபுரம்,ஆவலப்பம்பட்டி, பெரும் பதி, நல்லாம் பள்ளி,வேட்டைக்காரன்புதூர் உள்பட பல இடங்களில்மண்பாண்டங்கள் தயாரிப்பும் மற்றும்விற்பனை அதிக அளவில் நடக்கிறது.
இங்கு, சில இடங்களில் பொங்கல்மற்றும் கோவில் திருவிழா நாட்களில் பானைகள் மற்றும் உருவாரபொம்மைகள், தீச்சட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.பிற நேரங்களில்,சுட்டி விளக்குகள், குடிநீர் பானைகள்அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன.
இந்தஆண்டுக்கான தயாரிப்புகள், கடந்த,20 நாட்களுக்கு முன் நிறைவடைந்தது.கடந்த சில நாட்களாக வீட்டு உபயோகத்துக்கான மண்சட்டிகள், தட்டுகள் உற்பத்தி செய்யும் பணி தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாககோடை வெயில் சுட்டெரிப்பதால், விற்பனைக்குமண் பானை உற்பத்த விறுவிறுப்படைந்துள்ளது. ஆனால், இன்னும், விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு வேகம் எடுக்கவில்லை. இதுகுறித்துமண்பாண்ட தொழிலாளிகள் கூறியதாவது:-
கோடை வெயில் காலத்தில், மண் பானை நீரைகுடித்தால் தாகம் உடனடியாக நன்கு அடங்கும். குளிர்சாதனபெட்டிகுளிர் நீரைவிட மண்பானை குளிர் நீர் உடம்புக்கு நல்லது. எந்தவிதமான பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது.
ஒவ்வொரு ஆண்டும், 10 லி., 15 லி., கொள்ளளவுகொண்ட மண் பானைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்கிறஇதற்காக முன் கூட்டியே, இரு வகை பானைகள் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளன.
இதுவரை வியாபாரிகள் பெரிய அளவில் கொள்முதல் மேற்கொள்ளவரவில்லை. இன்னும் சில நாட்களில் கோடை வெயில் மேலும் தீவிரமடையும் போது, பானை விற்பனை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.
மண்பாண்ட தயாரிப்புதொழிலில் பாதிப்பைதவிர்க்க, நல வாரியத்தில் இருந்து, 60 வயது கடந்த, தொழிலாளர்களுக்கு, மாதம் ரூ.2ஆயிரம் ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
ஒருதரமானபெரிய குடிநீர் மண்பானை ரூ.150 முதல் ரூ.200 வரை சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story