சந்தேகம் எழுந்தால் கார் சீட் கவர்களை சோதனை செய்ய வேண்டும் பறக்கும் படையினருக்கு தேர்தல் செலவின பார்வையாளர் உத்தரவு
சந்தேகம் எழுந்தால் கார் சீட் கவர்களை சோதனை செய்ய வேண்டும் என்று, பறக்கும் படையினருக்கு தேர்தல் செலவின பார்வையாளர் உத்தரவிட்டுள்ளார்.
பல்லடம்
சந்தேகம் எழுந்தால் கார் சீட் கவர்களை சோதனை செய்ய வேண்டும் என்று, பறக்கும் படையினருக்கு தேர்தல் செலவின பார்வையாளர் உத்தரவிட்டுள்ளார்.
ஆலோசனை கூட்டம்
பல்லடம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட வழங்கல் அலுவலருமான கணேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் செலவின பார்வையாளர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த வருவாய் துறை அதிகாரி சாம் பிரசாத் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இதில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்புக்குழு என 3 குழுக்களும், 24 மணி நேரமும் செயல்படுவது குறித்தும், அவர்கள் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர் சாம்பிரசாத் கூறியதாவது:-
வாகனங்களில் சோதனையிடும் போது அனைத்துப் பகுதிகளிலும் சோதனையிட வேண்டும். கார்களில் டேஷ்போர்டு, சீட் கவர்கள், உள்ளிட்டவைகளில், வித்தியாசம் உள்ளதா? என கண்காணிக்க வேண்டும். சந்தேகப்படும்படி நடவடிக்கைகள் இருந்தால் ஆம்புலன்ஸ் வாகனத்தையும் சோதனை இடலாம். வங்கியிலிருந்து ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் கொண்டு செல்லப்படும் வாகன எண்கள், கலெக்டர் அலுவலகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன. அதன் நகல் பறக்கும்படை குழுக்களுக்கு தரப்பட்டுள்ளது. இந்த எண் இல்லாமல் வேறு வாகனங்களில், ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் கொண்டு சென்றால் அந்த வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.வாகன சோதனையில் ரூ.10 லட்சத்திற்கு மேல் பிடிபட்டு, உரிய ஆவணங்கள் இல்லை என்றால் வருமான வரித்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும்.
மதுபாட்டில்கள்
முறையின்றி கொண்டு செல்லப்படும் மதுபாட்டில்கள் குறித்து கலால்துறை மற்றும் போலீசாருடன் இணைந்து கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், பல்லடம் தாசில்தார் தேவராஜ், துணை தாசில்தார்கள் மயில்சாமி, சபாபதி, பறக்கும் படை அதிகாரிகள் கந்தசாமி, மகேஸ்வரன், மற்றும் அதிகாரிகள் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
---
-
Related Tags :
Next Story