தேர்தல் செலவின பார்வையாளர்களுக்கு பயிற்சி


தேர்தல் செலவின பார்வையாளர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 14 March 2021 9:29 PM IST (Updated: 14 March 2021 9:29 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் செலவின பார்வையாளர்களுக்கு பயிற்சி

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடுகிற அனைவருக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வேட்பாளர்கள் செய்யும் செலவுகளை கண்காணிக்க தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஜெயபாலன், வெங்கட்ராமன் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர். இதில் வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிக்கவும், ஆய்வு செய்வது குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது.

Next Story