மடத்துக்குளம் பகுதியில் அதிக மகசூல் தரும் பப்பாளி சாகுபடி
மடத்துக்குளம் பகுதியில் அதிக மகசூல் தரும் பப்பாளி சாகுபடி செய்யப்படுகிறது.
மடத்துக்குளம்
மடத்துக்குளம் பகுதியில் அதிக மகசூல் தரும் பப்பாளி சாகுபடி செய்யப்படுகிறது.
பப்பாளி சாகுபடி
மனித உடலில் ஆரோக்கியம் மற்றும் அழகு ஆகிய இரண்டிற்கும் பப்பாளியின் பங்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி சத்துக்களை பப்பாளி வழங்கி வருவதால், பொதுமக்கள் பப்பாளி பழங்களை விரும்பி வாங்கி சாப்பிடுகிறார்கள்.
மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளான வேடபட்டி, மைவாடி, மெட்ராத்தி, தாந்தோணி, துங்காவி, ஜோத்தம்பட்டி, போன்ற பல்வேறு பகுதிகளில் பப்பாளி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இது குறித்து மைவாடி பகுதியில் உள்ள பப்பாளி விவசாயிகள் கூறியதாவது:-
விற்பனை
மடத்துக்குளம் பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் பப்பாளியை தேர்வு செய்து சாகுபடி செய்து வருகிறோம். இது கோடை காலத்திற்கு மட்டும் அல்லாமல், எந்த காலத்திற்கும் ஏற்ற அதிக சத்துள்ள உணவாகும். பப்பாளி சாகுபடியை பொருத்தவரை, குறைந்தளவு தண்ணீர் இருந்தாலே போதுமானது. அதனால் சொட்டு நீர் பாசனத்தின் மூலம் பப்பாளி சாகுபடி செய்யப்படுகிறது. தொடர்ந்து 8 மாதங்கள் வரை பராமரிக்கப்பட்டு, அவ்வப்போது வட்டப்பாத்தி, களை வெட்டுதல், குழி எடுத்தல், போன்ற பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒரு பப்பாளி மரங்களுக்கு இடையே 6 அடிகள் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். உரமாக ஆட்டுச்சாணம், மாட்டு சாணம், ஆகியவற்றை மட்டுமே இட்டு வருகிறோம். பப்பாளியில் அவ்வப்போது, வெள்ளை நிறத்தில், கத்தாழை பூச்சி எனும் நோய் மட்டுமே தாக்கும் சூழ்நிலை ஏற்படும். தொடர்ச்சியான பராமரிப்பின் மூலம், அதனை அகற்றுவது சுலபம் ஆகும். மேலும் பல்வேறு பராமரிப்பு வேலைகள், செலவுகளுக்காக ஏக்கருக்கு ரூ.30 முதல் ரூ.40ஆயிரம் வரை செலவாகிறது.அதேபோல் பப்பாளி ஒரு கிலோ ரூ.20முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது.பப்பாளி பழம் மட்டுமே அதிக சத்தும், குறைவான விலையும் கொண்டது. எனவேதான் கிராமப்பகுதிகளில் இருந்து பப்பாளி பழங்கள் அதிக அளவில் நகரத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story