பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.21 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை
ரூ.21 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை
முத்தூர்
நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கேயம் இன காளைகள், கன்றுகள், மாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இதன்படி நேற்று நடைபெற்ற சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை மாவட்டங்களை சேர்ந்த காங்கேயம் இன காளைகள் வளர்ப்போர்கள், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கேயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் ஆகியோர் காங்கேயம் இன பெரிய பூச்சி காளைகள், இளம் பூச்சி காளைகள், செவலை பசுமாடுகள், மயிலை பூச்சிகாளைகள், மயிலை பசு மாடுகள், மயிலை கிடாரிகள், காராம்பசு கிடாரி கன்றுகள் ஆகியவற்றை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இந்த சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மொத்தம் 122 காங்கேயம் இன காளைகள், மாடுகளில் மொத்தம் 60 நாட்டு மாடுகள் ரூ.21 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த காங்கேயம் இன காளைகள், மாடுகள் வளர்க்கும் விவசாயிகள், வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story