தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை வாகன சோதனையில் ரூ.30 லட்சம் பறிமுதல்


தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை வாகன சோதனையில் ரூ.30 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 14 March 2021 9:48 PM IST (Updated: 14 March 2021 9:53 PM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் வாகன சோதனையில் இதுவரை ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி,

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய 5 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளது. இந்த தேர்தலில் பணம் பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் இதுவரை தர்மபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.30 லட்சத்தை பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய தீவிர வாகன சோதனையில் ரூ.18 லட்சத்து 76 ஆயிரத்து 400 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று நிலையான கண்காணிப்பு குழுவினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.11 லட்சத்து 22 ஆயிரத்து 420 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) தொடங்க உள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் சோதனைச்சாவடிகளில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story